சென்னை தரமணி ஏரிக்கரை தெரு, பிள்ளையார் கொவில் பஸ் நிறுத்தம் பகுதியிலுள்ள குடியிருப்புகளில் வினியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் தண்ணீரை பயன்படுத்தவே முடியாத சூழல் அமைகிறது. மேலும் அதிக விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். பிரச்சினை சரி செய்யப்படுமா?