செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நின்னக்கரை கிராமத்தில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் தினமும் கழிவு நீர் கலக்கிறது. இதனால் ஏரியை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. மேலும் ஏரி நீர் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.