செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பருக்கள் ஊராட்சி அடுத்த வேட்டாரம் பெரும்பாக்கம் கிராமத்தில் பஸ் நிறுத்தம் இல்லை. மாணவ மாணவிகள், ஊர் பொதுமக்கள் அனைவரும் மழை பெய்தாலும், வெயில் அடித்தாலும் புளியமரம் அடியில் நின்று தான் பஸ் ஏறி செல்ல வேண்டியுள்ளது. எங்கள் பகுதி மக்களுக்கு ஒரு பஸ் நிறுத்தம் கட்டித் தருவதற்கு வழி செய்யுமாறு சம்பந்தபட்ட துறையை கேட்டுக்கொள்கிறோம்.