தாம்பரம் பஸ் நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையை கடக்க நடை மேம்பாலம் உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிக்க் ஜி.எஸ்.டி. சாலையை நடந்து கடக்க முடியாதவாறு தடுப்புச்சுவர் அமைகப்பட்ட நிலையில், நகரும் படிகட்டுகளுடன் கூடிய இந்த நடைமேம்பாலத்தை பயன்படுத்தி தான் பொதுமக்கள் ரெயில் நிலையத்தை ஒட்டியுள்ள சாலையில் இருந்து எதிர்புறம் பஸ்நிலையத்துக்கும், பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையமும் செல்ல முடியும். இந்த நிலையில் நகரும் படிகட்டுகள் பெரும்பால நேரத்தில் இயங்காமலே உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் நடைமேம்பாலத்தை கடந்து செல்வதற்கு சிரமப்படுவதை காணமுடிகிறது. எனவே நகரும் படிக்கட்டுகள் தொடர்ந்து இயங்கும் வண்ணம் நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.