போக்குவரத்து நெரிசல்

Update: 2022-08-05 14:31 GMT

செங்கல்பட்டு மாவட்டம் வேதாச்சலம் நகரிலிருந்து நாட்டிணக்கிணறு வரை செல்லும் சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலையை ஒட்டி 4 மதுபானக்கடைகள் இருப்பதால் மதுப் பிரியர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. மேலும் அவர்கள் குடித்து விட்டு சாலையிலேயே வாகனங்களை நிறுத்திவிடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோள்.

மேலும் செய்திகள்