காஞ்சீபுரம் செவிலிமேடு ரோட்டு தெருவில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் உள்ள குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கியே உள்ளது. இதனால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுவதால், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் முகம் சுழிக்கும் சூழல் அமைகிறது. எனவே குப்பை தொட்டியில் தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.