சென்னை நஞ்சுடுராவ் சாலையில் கட்டுமானப் பொருட்களும், கழிவுப் பொருட்களும் வைக்கப்படுவதால் வாகன ஓட்டிகளுக்கு இடைஞ்சலாக இருக்கிறது. பாதி சாலையை இந்த கட்டிட பொருட்கள் ஆக்கிரமித்துள்ளதால், சாலையின் இரண்டு பக்கத்திலும் வாகனங்கள் வரும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரான போக்குவரத்துக்கு வழி செய்ய வேண்டும்.