சென்னை அப்துல்கலாம் பூங்கா அருகே இருக்கும் சாலை குண்டும் குழியுமாக காட்சி தருகிறது. இந்த சாலையில் பயணம் செய்யும் வாகனங்கள் விபத்தில் சிக்குவதும், இரு சக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி கீழே விழுவது போன்ற சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. கடந்த 2 வருடங்களாக மோசமான நிலையில் இருக்கும் இந்த சாலையை சீரமைத்து தர சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.