கடப்பாக்கம் அடுத்த இடைக்கழிநாடு பகுதியில் சேம்புலிபுரம் கிராமம் உள்ளது. இங்கு 15ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் இந்த சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வந்தனர்.கடந்த 2015-ஆம் ஆண்டு பராமரிப்பு பணி நடைபெற்றது. அதன்பின்பு 5 ஆண்டுகளாக மகளிர் சுகாதார வளாகம் பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே சிதிலமடைந்த சுகாதார வளாகத்தை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.