செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியம் ஒழலூர் ஊராட்சியில் உள்ள முக்கியமான பகுதிகளுக்குபயன்பெறும் வகையில் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் குடிநீர் வசதி செய்து தரப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக இந்த சுத்திகரிப்பு இயந்திரம் பழுதுடைந்து உள்ளது. இதனால் எங்கள் பகுதியில் சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். குடிநீர் பிரச்சினை தீர வழி என்னவோ?