காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றிய கரசங்கால் ஊராட்சியில் சாலையோர பகுதியில் நரிக்குறவர்கள் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இரவு நேரத்தில் இந்த சாலையில் வேகமாக வரும் வாகனங்களால் விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே சாலை ஓரத்தில் வசித்து வரும் நரிக்குறவர்களுக்கு பாதுகாப்பான இடத்தை ஏற்படுத்தி கொடுத்து, இந்த இடத்திலிருந்து அவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.