செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில் இருந்து நெல்லிக்குப்பம் செல்லும் பிரதான சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. இதுகுறித்து, பல முறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாநகராட்சி உயர் அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.