செங்கல்பட்டு மாவட்டம், சித்தாலப்பாக்கம் பஜனை கோவில் தெரு, அரவிந்த் அவென்யூ பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் அவதி அடைகின்றனர். தற்போது பள்ளி தேர்வு நடப்பதால் மாணவ-மாணவியர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, மின்வாரிய துறை அதிகாரிகள் மின்தடை ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.