திருப்போரூர் பெரியவிப்பேடு முதல் முள்ளிப்பாக்கம் வரை செல்லும் சாலையின் வளைவானது ஆபத்தான நிலையில் உள்ளது. ஏனெனில் சாலையின் ஓரத்தில் கால்வாய் உள்ளதால் இந்த வளைவில் நான்கு சக்கர வாகனங்களும் இரு சக்கர வாகனங்களும் ஒரே நேரத்தில் கடப்பதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரண்டு விபத்துகள் அந்த பகுதியில் நிகழ்ந்துள்ளது. எனவே விபத்துகளை தவிர்ப்பதற்கு இந்த சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது..