செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் படூர் மெயின் ரோட்டிலிருந்து நாவலூர் செல்லும் சாலையில் கால்நடைகள் படுத்து உறங்குகின்றன. இதனால் அந்த சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. மேலும் சாலையில் திரியும் கால்நடைகளால் விபத்துக்களும் ஏற்படுகின்றன. எனவே கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.