சித்தாமூர் அடுத்த போந்தூர்-வயலுார் சாலை சந்திப்பில், பஸ் நிறுத்தம் உள்ளது. பள்ளி, கல்லுாரி மற்றும் பணிகளுக்கு செல்பவர்கள், இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து தான் பஸ் ஏறி செல்கின்றனர். 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நிழற்குடை, சரியான பராமரிப்பு இல்லாததால், கூரையின் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும், இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்தும் காணப்படுகின்றன. என்று? இடிந்து விழுமோ என்ற அச்சத்திலேயே பயணியர்கள் பஸ் ஏறுகின்றனர். நிழற்குடை சீர் செய்யப்படுமா?