செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம், காரணைப்புதுச்சேரி செல்லும் சாலையில் புதிதாக அரசு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமக்கள் சாலையிலேயே அமர்ந்து குடிப்பதால், அந்த வழியாக செல்லும் பெண்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனே மூட வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் வேண்டுகோள்.