மாமிச கழிவுகளால் துர்நாற்றம்

Update: 2022-08-02 13:55 GMT

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப் பெருமாள் கோவிலை அடுத்த மேல்பாக்கம் ஊராட்சிக்கு செல்லும் சாலையின் இருபுறமும் காடுகள் உள்ளன. அங்கு பல்வேறு வகையான மூலிகை மரங்கள் உள்ளதால் இந்த சாலையில் பெரும்பாலானோர் தினமும் காலையில் நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். தற்போது அந்த வனப்பகுதியின் சாலையோரத்தில் அதிகமாக மாமிச கழிவுகள் வீசப்படுகின்றன. இதனால் கடும் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்