வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2022-08-02 13:54 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி நெல்லிக்குப்பம் சாலையில் நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி எதிரே உள்ள சாலையை கடந்து செல்வதற்கு மாணவிகள் அச்சப்படுகிறார்கள். எனவே பள்ளி அருகே இருக்கும் சாலை பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பெற்றோர்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்