செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே உள்ள லால் பகதூர் சாஸ்திரி சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையை அதிகமாக பயன்படுத்தும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.