காஞ்சீபுரம் மூங்கில் மண்டபம் பகுதியில் உள்ள நடைபாதையில் தேவையற்ற கற்களுடன் மணல் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள், மற்றும் மாணவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நகரின் பெரும்பாலான நடைப்பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?