பயன்பாட்டில் இல்லாத காவல்துறை உதவி மையம்

Update: 2022-08-02 13:48 GMT

காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் கோவில் எதிரேயுள்ள மேற்கு ராஜ வீதியில் பள்ளி அருகே பல ஆண்டுகளாக பயன்பாடில்லாமல் அமைந்திருக்கும் காவல் துறை உதவி மையம் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகிறது. சாலையில் இருக்கும் காவல் உதவி மையத்தின் அருகே தள்ளுவண்டி கடைகளையும் நிறுத்தி வைத்திருப்பதால் பள்ளி செல்லும் மாணவிகளும், பொதுமக்களும் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சாலையில் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் காவல் துறை உதவி மையம் மற்றும் தள்ளு வண்டிகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்