காஞ்சீபுரம் மாவட்டம் காமாட்சி அம்மன் கோவில் வடக்கு கோபுரம் பகுதியில், சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பயன்பாட்டிற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நவீன கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இந்த கழிப்பறை முறையாக பராமரிக்கபடாமல் பல மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. விழா காலங்களிலும் விடுமுறை நாட்களிலும் காமாட்சியம்மன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கழிப்பிட வசதி இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கழிப்பறையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.