கொளத்தூர் மூகாம்பிகை முதல் கிரிஜா நகர் பஸ் நிலையம் வரை சுமார் அரை கிலோ மீட்டர் இடைப்பட்ட தூரத்தில் 30-க்கும் மேற்பட்ட துரித உணவகங்கள் நடைபாதையில் செயல்பட்டு வருகின்றன. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாவது மட்டுமல்லாமல் பெருமளவு விபத்துகளும் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.