சென்னை அயன்புரம் மேட்டு தெரு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் காய்கறி மற்றும் வெங்காயம் தக்காளிகளை தள்ளு வண்டியில் விற்கும் வியாபாரிகள் மிகவும் எடை குறைவாக அதாவது ஒரு கிலோ விற்கு எண்ணூற்று ஐம்பது கிராம் அளவிற்கு காய்கறிகளை விற்று பொதுமக்களை ஏமாற்றி வருகிறார்கள். இது பற்றி பொதுமக்கள் கேட்டால் தகாத வார்த்தைகளால் அசிங்கமாக பொதுமக்களை பேசுகிறார்கள். அவர்கள் உபயோகப்படுத்தும் எடை கற்களில் அரசாங்க முத்திரை ஏதுமில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருபற்றி நடவடிக்கை எடுப்பார்களா?