கழிவுகள் அகற்றப்படுமா?

Update: 2022-08-01 14:20 GMT

சென்னை கோட்டுர்புரம் ரெயில் நிலையம், கஸ்தூரிபாய் நகர் ரெயில் நிலையத்திற்கு இடைப்பட்ட கூவம் ஆற்றின் இடையில் சிறிய பாலம் உள்ளது. அந்த இடத்தில் சிறிய மரம் ஒன்று ஆற்றின் குறுக்கே சாய்ந்து கிடப்பதால் நீரேட்டம் சீராக அமைவதில்லை. இதனால் இப்பகுதியில் கொசுக்கள் அதிகமாக பெருகி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. எனவே கால்வாயில் உள்ள மரத்தை அகற்றவும், மரத்தை சுற்றியுள்ள கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்