செங்கல்பட்டு மாவட்டம் பழைய ஜி.எஸ்.டி. சாலை, அனுமந்தபுத்தேரி, நத்தம் அஞ்சல் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்வாயில் நீரோட்டம் சீராக செல்வதற்கு போதுமான ஆழம் இல்லை. இதனால் மழை காலத்தில், மழை நீர் சாலை மார்க்கத்தில் உள்ள கழிவுகளோடு சேர்ந்து தங்கியும் விடுகிறது. இதனால், துர்நாற்றம் ஏற்பட்டு சாலையை பயன்படுத்தவே முடியாத அவல நிலை ஏற்படுகிறது. எனவே மழைநீர் கால்வாயை தூர்வாரவும் திறந்த நிலையில் இருக்கும் கால்வாயை சிமெண்ட் பலகை கொண்டு மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.