காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் உள்ள போலீஸ் நிலையம் எப்போதும் பூட்டியே கிடக்கிறது. இதனால் பஸ் நிலையத்தில் திருட்டு நடந்தாலோ, அசம்பாவிதம் நடந்தாலோ தகவல் தெரிவிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே போலீஸ் நிலையத்தை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.