செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பேரமனூர் ரெயில்வே கேட், எம்.ஜி.ஆர். தெரு அருகே சாலையோரம் இருக்கும் மின் கம்பம் மிகவும் மோசமான நிலையில் இருப்பது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து மின்சார வாரியம் சார்பில் புதிய மின்கம்பம் நடப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் துரிதமாக செயல்பட்ட மின்சார வாரியத்துக்கும் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்குக்கும் பாராட்டை தெரிவித்தனர்.