காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில், தாம்பரத்திலிருந்து ஆவடியை நோக்கி செல்லும் பாதையிலுள்ள சிமெண்ட் பலகை சரிந்து விழுந்து பள்ளமாக இருப்பது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் சுட்டிகாட்டது. இதற்கு தீர்வு கிடைக்கும் விதமாக அந்த சிமெண்ட் பலகை சம்பந்தபட்ட அதிகாரிகளால் சரி செய்யப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்தனர்.