பிராட்வே முதல் கூடுவாஞ்சேரி வரை செல்லும் (தடம் எண் : B21) பஸ் தற்போது இயக்கப்படுவதில்லை. இதனால் கூடுவாஞ்சேரியிலிருந்து பிராட்வே செல்வதற்கு நேரடி பஸ் வசதி இல்லாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். வேலைக்கு செல்பவர்களும் நேரத்துக்கு செல்ல முடியாத சூழல் அமைகிறது. எனவே மேற்கூறிய பஸ் சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.