காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் எழிச்சூர் ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் அரசு நிர்ணயித்த அளவை விட அளவுக்கு அதிகமாக மண் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயமும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அதிக அளவில் மணல் அள்ளப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்குமா?