கொளத்தூரின் நுழைவு வாயிலாகக் கருதப்படும் முக்கியப் பகுதியான 'அண்ணா சிலை' பஸ் நிறுத்தத்தில் இரட்டை ஏரி நோக்கிச் செல்லும் மார்க்கத்தில் நிழற்குடை இல்லாமல் உள்ளது. இதனால் வெயில் மற்றும் மழை காலங்களில் பயணிகள் மற்றும் பெண்கள் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே மேற்கூறிய இடத்தில் இருக்கைகளுடன் கூடிய நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.