சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை பஸ் நிறுத்தம் மிகவும் மோசமாக உள்ளது. பயணியர் அமரும் இருக்கைகள் தூசி படிந்து உள்ளது. இருக்கைகளுக்கு பின்னால் மண் மேடுகள் உருவாகி துர்நாற்றமும் வீசுகிறது. பயணிகள் நிற்கவும் சங்கடமாக உள்ளது. இதனால் பயணிகள் பஸ் நிறுத்தத்தில் உள்ள இருக்கைகளில் அமர முடியாமல் நீண்ட நேரம் நிற்கும் சூழல் அமைகிறது. பயணிகள் நலன் கருதி பஸ் நிலையத்திலுள்ள இருக்கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.