குப்பை மேடாக மாறும் சாலை

Update: 2022-07-30 13:16 GMT

ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள சாலையில் பல மாதங்களாக குப்பைகள் வீசப்படுவதால் அந்த சாலையே குப்பை மேடாக மாறி வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் அந்த பகுதியே அலங்கோலமாக மாறி வருகிறது. மேலும் சாலையில் வீசப்படும் குப்பைகள் அந்த பகுதியிலுள்ள கால்நடைகளுக்கு உணவாகவும் மாறி வருவது வேதனையளிக்கிறது. எனவே குவிந்துள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்