செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் காரணைப்புதுச்சேரி பகுதியிலுள்ள சாலையின் இருபுறங்களிலும் ஆங்காங்கே குப்பைகள் தேங்கிய நிலையில் இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களும் மூக்கைப் பிடித்தபடி செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஊரப்பாக்கம் காரணைப்புதுச்சேரி பகுதியில் தேங்கியிருக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.