கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

Update: 2022-07-30 13:10 GMT

வாலாஜாபாத் அத்திவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னையன் சத்திரம் கிராமம், காமராஜர் நகர் பகுதியில் இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் நடமாட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். சாலை அமைக்கும் இடத்தில் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதால் சாலை அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைத்து தர வேண்டும் என இருளர் இன மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்