சேதமடைந்த சிமெண்ட் பலகை

Update: 2022-07-30 13:07 GMT

குன்றத்தூர் பகுதியில், தாம்பரத்திலிருந்து ஆவடியை நோக்கி செல்லும் பாதையிலுள்ள சிமெண்ட் பலகை ஆங்காங்கே சரிந்து விழுந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேம்பாலத்தில் போடப்பட்டுள்ள சிமெண்ட் பலகைகளுக்கு இடையில் இடைவெளி இருப்பதால் அடிக்கடி பலகை சரிந்து பள்ளம் ஏற்படுகிறது. அப்பாதையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்களும் சிரமப்படும் சூழ்நிலை அமைகிறது. பாலத்தை விட்டு இறங்கி சாலையில் செல்லலாம் என்றால் அப்பாதையில் செல்லும் வாகனங்களின் வேகம் கட்டுக்கடங்காமல் செல்கின்றன. இடைவெளியை சிமெண்ட் பூசி அடைத்தால் ஓரளவுக்கு நிரந்தர தீர்வு காணலாம்.

மேலும் செய்திகள்