சென்னை வில்லிவாக்கம் அயனாவரம் மேட்டுத் தெரு பகுதியில் குடிநீரோடு கழிவுநீரும் கலந்து வருகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் குடிநீரை பயன்படுத்தவே முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கும் சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினையை சீர் செய்ய வேண்டும்.