காஞ்சீபுரம் மாவட்டம் காந்தி சாலையில் குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்வதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சீரமைக்கப்படாமல் இருப்பது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதற்கு தீர்வு கிடைக்கும் விதமாக சிமெண்ட் கலவை கொண்டு சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற தினத்தந்திக்கும் பாராடை தெரிவித்தனர்.