போலீஸ் பற்றாக்குறை

Update: 2022-07-29 14:47 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் சோமங்கலம் மணிமங்கலம் ஆகிய காவல் நிலையங்கள் தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குள் சேர்க்கப்பட்டு தாம்பரம் மாநகர கமிஷனர் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த இரு காவல் நிலையங்களிலும் போதிய எண்ணிக்கையில் போலீசார் இல்லாததால் இந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடப்பதாகவும், மேலும் இரவு ரோந்து பணியில் போலீசார் சரியான முறையில் ஈடுபடுவதில்லை எனவும் கூறப்படுகிறது. எனவே மேற்கூறிய காவல் நிலையங்களில் போதிய எண்ணிக்கையில் போலீசார் அமர்த்தப்பட நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்