சென்னை புளியந்தோப்பு நரசிம்ம நகர் 4-வது தெருவில் சாலயோரம் மழைநீர் வடிகாலுக்காக பள்ளம் தோண்டபட்டு சரிவர மூடப்படவில்லை. கடந்த 6 மாதகாலமாக இந்த நிலை நீடிக்கிறது. பழுதை சரி செய்யாத காரணத்தால் மேலும் பாதிப்படைந்து பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. இதன் அருகில் மின் இணைப்பு பெட்டி உள்ளதால் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மாநகராட்சி கவனித்து பள்ளத்தை மூடி சாலையை சீரமைக்க வேண்டும்.