சென்னை கொளத்தூர் ஆண்டியப்பன் தெருவில் உள்ள மரம் ஆபத்தான வகையில் சாய்ந்து இருப்பது குறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு மரத்தை அகற்றியுள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் தங்களது நன்றியை தெரிவித்து கொண்டனர்.