சென்னை வில்லிவாக்கம் ரெயில் நிலைய நடைமேடையில் இருக்கும் மின் விசிறி ஓடாமல் இருப்பது குறித்தும், பயணிகள் மின் விசிறிகள் சில பயணிகள் அமரும் இடத்தில் மேலே இல்லாமல் வேறு இடத்தில் இருப்பது குறித்தும் 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து ரெயில்வே அதிகாரிகள் திரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் நடவடிக்கை எடுத்த ரெயில்வே துறை மற்றும் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பாராட்டை தெரிவித்தனர்.