சாலையில் குப்பைகள்

Update: 2022-07-27 14:26 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பழைய மகாபலிபுரம் சாலை படூர் மெயின் ரோட்டில் குப்பைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதி அசுத்தமாக காட்சி தருவதுடன் துர்நாற்றமும் வீசி வருகிறது. குப்பைகள் அகற்றப்படாமலே இருப்பதால் அந்த பகுதியை கடந்து செல்லும் மக்கள் முகம் சுழித்தவாறு செல்கிறார்கள். சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குவிந்திருக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்