யாருக்கும் பயன்படாத மணிக்கூண்டு

Update: 2022-07-27 14:19 GMT

காஞ்சீபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாவட்ட மக்கள் வந்து செல்கின்றனர். பயணிகள் தங்கள் பஸ்சுக்கான பயண நேரம் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் அனுமதியின் பேரில் மணிக்கூண்டு அமைக்கப்பட்டது. தற்பொழுது இந்த மணிக்கூண்டு பழுதாகி பல மாதங்களுக்கு மேலாக பராமரிப்பின்றி உள்ளது. பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள், மாணவ மாணவிகள், தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் மணிக்கூண்டை சரி செய்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்