சென்னை பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலம் கீழே இருக்கும் சுரங்க பாதையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த காரணத்தால் பொதுமக்கள் பயன்படுத்தும் பிரதான சாலையில் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சரியான முறையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படாததால் வாகன ஓட்டிகள் சிரமத்துடனே பயணம் செய்கிறார்கள். எனவே உடனே போக்குவரத்து துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.