சென்னை சேலையூர் 150 அடி மெயின் ரோடு, அகரம் ரங்கநாதன் நகர் பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து சிலர் செங்கல் போன்ற கட்டுமான பொருட்களை வைத்துள்ளனர். இதனால் நடைபாதையில் பயணிப்பவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது. எனவே நடைபாதையில் பயணிப்பவர்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.