கழிவு நீர் குழாய் சேதம்

Update: 2022-07-26 15:32 GMT

சென்னை வண்ணராப்பேட்டை தாண்டவராயா தெருவில் கழிவு நீர் குழாய் உடைந்து கடந்த ஒரு வார காலமாக கழிவு கசிந்து வருகிறது. தெருவில் சென்றாலே பயங்கரமாக துர்நாற்றம் வீசுகிறது. அந்த தெருவில் உள்ள பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் மூக்கை மூடி கொண்டு பாடங்களை பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது. கழிவு நீர் வெளியேற்றத்தினால் பொது மக்களுக்கும் குறிப்பாக பள்ளி பிள்ளைகளுக்கும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.கழிவு நீர் குழாய் சேதம்

மேலும் செய்திகள்