சென்னை கொருக்குப்பேட்டையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நீண்ட நாட்களாக நடந்து வருகின்றது. இதனால் கொருக்குப்பேட்டைக்கு அரசு பஸ்கள் வருவது இல்லை. இதனால் அங்கு உள்ள மக்கள் ஷேர் ஆட்டோ போன்ற போக்குவரத்தை தான் பெரிதும் நம்பி உள்ளார்கள். ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களும் பயணிகளிடம் அதிக பணம் வசூலித்து வருகின்றனர், (அதிவேகத்தில் ஆட்டோவை இயக்குவது, ஏன் என்று கேட்டால் மரியாதை குறைவான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர்). எனவே கொருக்குப்பேட்டையில் இருந்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.